வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

" alt="" aria-hidden="true" />


வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 
 
வட்டிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு வரவேற்கத் தக்க நடவடிக்கை என்று தெரிவித்துள்ள அவர், நெருக்கடியான நேரத்தில் பாகுபாடுகளை மறந்து நாட்டுக்கும் மனித குலத்துக்கும் கடமை ஆற்ற வேண்டியது முக்கியம் என்றும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் 7,500 ரூபாய் உதவி நிதி, குடும்ப அட்டைகளுக்கு தலா 10 கிலோ விலையில்லா அரிசி அல்லது கோதுமை, பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கு நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


Popular posts
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது
Image
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image
ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்
Image