மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .

மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .


" alt="" aria-hidden="true" />


உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு விதித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா வைரஸ் நிவாரணம் அறிவிப்பின்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 மட்டும் ஏப்ரல் மாதத்திற்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்பெறும் வகையில், அவர்களின் குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரையை விலையின்றி வழங்கப்படும்.


அதிக எண்ணிக்கையில் நியாயவிலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தெருவழியாக உள்ள குடும்ப அட்டைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் நிவாரணத் தொகை பெறும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில்‌ நிவாரண தொகை மற்றும் உணவுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலூகா மானியதள்ளி கிராமத்தில் சுமார் 1200 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


கொரோனா‌ வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியாய விலை கடையில் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், பொருட்களை வாங்குவதற்கு முன் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கட்டாயம் தங்கள் கைகளை கழுவிவிட்டு பின்பு நிவாரண தொகைமற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் எனவும் ‌ கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவதை தடுக்க சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் ‌‌என‌ நியாய விலை கடை உரிிமையாளர் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் நிவாரண தொகை ₹1000 மற்றும் உணவு பொருட்களை வாங்கிச் சென்றனர்


Popular posts
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது
Image
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image
ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்
Image